“நாளை நாளை” பாடல் ட்ரோல் – நடிகை மமிதா பைஜுவின் பதில்

மலையாளத் திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி, ‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றியால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மமிதா பைஜு தற்போது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Feb 09, 2026 - 19:40
0 6

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ திரைப்படத்தில் நடித்த அவர், தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்துள்ள ‘கர’, ‘சூர்யா 46’, ‘இரண்டு வானம்’ உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாகத் தயாராகி வருகின்றன.

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மமிதா பைஜு மேடையில் உற்சாகமாக நடனமாடியதுடன், ரசிகர்களின் கோரிக்கையின்படி ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவனுக்கே...’ பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், சிலர் அதை கிண்டலாகவும் பகிர்ந்தனர்.

இதுகுறித்து மமிதா பைஜுவிடம் கேட்கப்பட்டபோது, சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகைய விஷயங்களை சிரிப்பாக எடுத்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டும் என்ற மனப்பாங்குடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User