சாதி வெறி தவறென வகுப்பெடுக்கும் பிரதீப் ரங்கநாதனின் டியூட் விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி சிறப்பாக வெளியாகி இருக்கிறது "டியூட்" திரைப்படம். 

சாதி வெறி தவறென வகுப்பெடுக்கும் பிரதீப் ரங்கநாதனின் டியூட் விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளி சிறப்பாக வெளியாகி இருக்கிறது "டியூட்" திரைப்படம். 

சர்ப்ரைஸ் ஈவன்ட்ஸ் வைத்து நடத்தும் அகன் ( பிரதீப் ரங்கநாதன்) மற்றும் குறள் (மமீதா பைஜூ). காதல் தோல்வியில் இருக்கும் அகன் , இதற்கிடையில் காதலைச் சொல்லும் குறள். அதை மறுக்கும் அகன் , வருத்தத்துடன் ஊரை விட்டுச் செல்லும் குறள் என இப்படிச் செல்கிறது கதை. 

போன பிறகுதான் அருமை தெரியும் என்பது போல் குறள் சென்ற பிறகு அவர் மேல் காதல் வருகிறது அகனுக்கு. திரும்பிச் சென்று திருமணத்திற்கு விருப்பம் கேட்டால் , இல்லை என மறுக்கிறார் குறள். உடன் இன்னொருவரை காதலிப்பதாகவும் சொல்கிறார். இப்படிச் செல்லும் கதையில் அடுத்து என்ன என்பது மீதிக் கதை. 

பிரதீப் ரங்கநாதன் கதையின் முக்கிய புள்ளி அவர்தான், அதனாலயே படம் முழுக்க முழு எனர்ஜியையும் அதிர்வையும் கொடுத்துக்கண்டே இருக்கிறார். படம் துவக்கத்திலிருந்து பரபரப்புடன் செல்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறார் பிரதீப். மமிதா பைஜு, அழகுடன் இணைந்த டாம் கேர்ள். அசால்ட் ஆகவே வருகிறது. கிளிக் செய்தவுடன் அவர் கண்கள் கலங்குவது அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. 

அதிலும் முகம் நிறைய புன்னகையும் கண்களில் கண்ணீரும் அவர் காட்டும் மகிழ்ச்சி இன்னும் அலாதியாகவே தெரிகிறார். படத்தில் அடுத்த கவனத்தை இருப்பவர் சரத்குமார், அவருக்குள் இரண்டு கேரக்டர்கள் , ஜாலியான அப்பா, கொடூரமான ஜாதி வெறியன் இரண்டு வேறு மனிதர்களாக நடிப்பை அப்படி பிரதிபலிக்கிறார். 

அதிலும் வில்லத்தனத்தை கூட காமெடியாக கையாண்டிருப்பது புதுமை. படத்தின் இன்னொரு சிறப்பான கதாபாத்திரம் பரிதாபங்கள் டிராவிட், தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோ ஃப்ரெண்ட் கிடைத்துவிட்டார் என்று சொல்லலாம். 

கலாச்சாரம், பண்பாடு, என தேவையில்லாமல் அத்தனையும் ஏன் பெண்களின் தாலி மேல் வைக்கிறீர்கள், இந்த 2025 ஆம் ஆண்டிலும் ஒரு பொண்ணு காதலிக்கிற நபருக்கு திருமணம் செய்து வைக்க மாட்டேன் என சொல்வதுதான் கேவலம் என்பதை 2K ஸ்டைல் கதையாக சொல்லியிருக்கிறார் கீர்த்தீஸ்வரன். 

ஆனால் போலியாக நடத்தப்படும் கல்யாணத்தை கொண்ட திரைக்கதையை தவிர்த்து இருக்கலாம். படம் துவங்கியது முதல் முடிவு வரை பரபரப்பாக செல்கிறது, அதற்கு பக்க பலமாக சாய் அபயங்கர் இசை மேற்கொண்டு பலம் சேர்த்திருக்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் சென்னையும் அதன் அழகும் மிக அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பரத் விக்ரமன் எடிட்டிங் படத்தின் வேகத்தை எங்கேயும் குறைக்காமல் பரபரவென சென்று கொண்டிருக்கிறது. 

ஐந்தறிவு கொண்ட நாய் கூட, அதற்குப் பிடித்த நாயுடன் இணைகிறது, ஆனால் ஆறறிவு படைத்த ஒரு பொண்ணு அப்பா அம்மா சொல்ற பையன் கூட தான் இணையனும். இது எவ்வளவு பெரிய கொடுமை " என்கிற வசனத்தில் இயக்குனர் கைத்தட்டல் பெறுகிறார். 

மொத்தத்தில் இந்த கால இளைஞர்களுக்கு ஏற்றபடி மேலும் அக்கால பழமை ஊறிப்போன பெரியவர்களுக்கும் ட்ரெண்டிங்காக கிளாஸ் எடுக்கிறது "டியூட்" திரைப்படம்.