திரையில் கவர்ச்சி, வெளியே வலி...! அரிய நோயுடன் போராடும் பிரபல நடிகை

பாலிவுட்டின் நடிகை பூமி பட்னேகர் தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது திரைப்படங்களுடன் சேர்ந்து வெப் தொடர்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு அரிய வகை தோல் நோயால் தன்னை பல ஆண்டுகளாக வாட வைக்கும் நிலை குறித்து அவர் திறந்த மனதுடன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது பூமி தெரிவித்ததாவது,"எனக்கு ‘எக்ஸிமா’ என்ற அரிய தோல் நோய் உள்ளது. இது எனக்கு சிறுவயது முதலே இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாக கண்டறியப்பட்டது. அதிகமான மன அழுத்தம் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் போது தோலில் தடிப்புகள், அரிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.

அந்த வலி சில நேரங்களில் தாங்க முடியாததாக மாறுகிறது. தற்போது இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.மேலும், தனது உடல்நிலை குறித்து இவ்வாறு திறந்த மனதுடன் பகிர்ந்த பூமியின் பேட்டி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.