அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் விமர்சனம் – ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டிய கேமரூன்!

2009இல் ‘அவதார்’ முதல் பாகத்தின் மூலம் பாண்டோராவின் அற்புத உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளியானது.

Dec 19, 2025 - 11:17
Updated: 6 months ago
0 3
அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் விமர்சனம் – ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டிய கேமரூன்!

ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக்குக்குப் பிறகு தன்னை முழுவதுமாக அவதார் உலகத்துக்கே அர்பணித்துவிட்டார் என்பதை இந்த ‘ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் மீண்டும் நிரூபிக்கிறது. 2009இல் ‘அவதார்’ முதல் பாகத்தின் மூலம் பாண்டோராவின் அற்புத உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ வெளியானது. அதன் தொடர்ச்சியாக இப்போது வெளியாகியிருப்பது ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ – அவதார் தொடரின் மூன்றாம் பாகம்.

முதல் பாகத்தில் இருந்து தொடர்ந்து வரும் காலனல் குவாரிட்ச் இந்தப் படத்திலும் வில்லனாக இருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் அவரை ஒரு பாசக்கார தந்தையாகவும் மாற்றியிருக்கிறார். ஆனால், இம்முறை உண்மையான அச்சுறுத்தலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் ‘நெருப்பு தேவதை’ வராங் – ஓர் அக்கிரமமான, பயங்கரமான வில்லி, பாண்டோராவின் புனிதத்தையே சவால் செய்யும் போர் தலைவி.

படம் ஆரம்பிக்கிறது ஜேக் சுல்லியின் குடும்பத்தின் மனச்சோகத்தில் – ஒரு மகனின் இழப்பால் மற்றொரு மகன் மீது ஏற்படும் குற்ற உணர்ச்சியுடன். தாமதமின்றி, நேரடியாக ஆக்ஷன் மற்றும் கதைப் போக்கில் நுழைகிறது ‘ஃபயர் அண்ட் ஆஷ்’. ஸ்பைடர் என்ற குழந்தையை பாண்டோராவிலிருந்து பாதுகாப்பாக மனிதர்களின் பகுதிக்கு அனுப்ப முடிவெடுக்கும் ஜேக் சுல்லி, அதற்காக பறக்கும் மீன்களால் உருவான அற்புதக் கப்பலொன்றில் பயணம் மேற்கொள்கிறார். அந்த அமைதியான பயணத்தை நெருப்புத் தேவதை வராங்கின் பீக்காகிய திருட்டு மற்றும் கொள்ளையை முறியடிக்கிறது. அதன் பின் தொடரும் ஓட்டம் – குடும்பத்தைக் காப்பாற்றும் ஓட்டம் – வாழ்க்கைக்கான ஓட்டம் – ஒரு பெரிய ஆக்ஷன் பிளாக்பஸ்டராக ஜேம்ஸ் கேமரூன் இதை அமைத்திருக்கிறார்.

ஸ்பைடர் தனது மெமரியான அப்பாவிடம் சேர்ந்தாரா? ஜேக் தனது குடும்பத்தையும், நாவி இனத்தையும் காப்பாற்றினாரா? கிரேஸ் பிறக்க வைத்த அந்த மாய குழந்தை கிரிக்கு ஏவா உதவினா? – இது போன்ற பல கேள்விகளுக்கு படம் பதில் சொல்லும் முறை, ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் கற்பனை ஆகியவற்றின் சரியான சமநிலையில் அமைந்துள்ளது.

நெய்த்ரி தனது கணவரை மீட்க ஒருத்தியாக நிற்கும் காட்சிகள், கடைசிக் கிளைமேக்ஸில் பாண்டோரா ஒரு பிரம்மாண்டத்தின் சிறு புள்ளி மட்டுமே என்பதை உணர்த்தும் அந்த ஒற்றைக் காட்சி – இவை அனைத்தும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. மனிதர்களின் தியாகம், மீன்களின் போர், குழந்தைகளின் வீரம் என அவதார் 3 வேறொரு அளவுக்குச் சென்றுள்ளது.

பிளஸ்கள்:

படத்தின் முதல் ஃபிரேம் முதல் கடைசி ஃபிரேம் வரை காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. 3டி தொழில்நுட்பம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் விரும்பிகளுக்கு இது ஒரு பக்கா விருந்து. சாம் வொர்த்திங்டன், ஜோ சால்டனா, கேட் வின்ஸ்லெட், ஊனா சாப்ளின் (வராங்) ஆகியோரின் நடிப்பு, முகம் தெரியவில்லை என்றாலும், உணர்ச்சிகள் தெளிவாக உணரப்படுகின்றன. ரூசல் கார்ப்பெண்டரின் ஒளிப்பதிவு, அண்டர்வாட்டர் மற்றும் ஆகாயப் போர்க் காட்சிகள், சைமன் ஃபிராங்கிளினின் பின்னணி இசை – இவை அனைத்தும் படத்தின் இதயத்தை அடிக்கின்றன.

மைனஸ்கள்:

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருப்பதால், புதிய ரசிகர்களுக்கு கதைப் பின்னணி குறித்து எந்தவித வழிகாட்டுதலும் இல்லை. கதை மற்றும் திரைக்கதையில் புதுமை குறைவாகவே உள்ளது. ஜேக்கைப் பிடிப்பது, குடும்பத்தைக் காப்பாற்றுவது, இறைவனின் இடைவேளையில் காப்பாற்றப்படுவது என முதல் இரண்டு பாகங்களில் காணப்பட்ட அதே கதை வார்த்தைகள் இங்கேயும் மீண்டும் வருகின்றன – ஆனால், அச்சமயம் விஷுவல் பிரில்லியன்ஸ்ஸின் சக்தியால் மிரள வைக்கிறது.

மொத்தத்தில், விமர்சனங்களை விடுத்து, திரையரங்கில் இந்த படத்தின் மாயத்தை நீங்களே அனுபவியுங்கள். கண்ணையும் மனதையும் பறிக்கும் ஒரு விஷுவல் ஸ்பெக்டாக்குலர் இது. ஜேம்ஸ் கேமரூன் தாராளமாக அவதார் 4ஐ உருவாக்கட்டும்!

ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: சாம் வொர்த்திங்டன், ஜோ சால்டனா, கேட் வின்ஸ்லெட், ஊனா சாப்ளின்
இயக்குநர்: ஜேம்ஸ் கேமரூன்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User