25 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் ‘மின்னலே’

கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ் மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Feb 09, 2026 - 19:43
0 38
25 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் ‘மின்னலே’

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரைக்கு வந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘படையப்பா’, ‘கில்லி’, ‘மங்காத்தா’ போன்ற படங்கள் மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது நடிகர் மாதவன் நடித்த பிரபல காதல் திரைப்படமான ‘மின்னலே’ மீண்டும் திரைக்கு வர உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் மாதவன், ரீமாசென், அப்பாஸ் மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன. திரைப்படமும் வெளியான காலத்தில் நல்ல வசூலைப் பெற்றதுடன், காதல் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு ‘மின்னலே’ திரைப்படம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

மேலும், டி.ராஜேந்தர் இயக்கி நடித்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் 43 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் மீண்டும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User