கண்ணைப் பறிக்கும் ரெட்… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரியா பவானி சங்கர்
சமீபத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரெட் நிற ஆடையில் அழகாக அலங்கரித்துக் கொண்டு வெளியான பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. அதன் பின்னர், ‘கடைகுட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘ருத்ரன்’, ‘பொம்மை’ உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜீவாவுடன் நடித்த ‘பிளாக்’ மற்றும் அருள்நிதியுடன் நடித்த ‘டிமாண்டி காலனி 2’ ஆகிய படங்கள் வணிக ரீதியாக நல்ல வெற்றி பெற்றன.
சமீபத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரெட் நிற ஆடையில் அழகாக அலங்கரித்துக் கொண்டு வெளியான பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த ரெட் டிரஸ், அவரது அழகை மேலும் மிளிரச் செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. "கண்ணைப் பறிக்கும் ரெட்!" என ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.




What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)