குணசேகரனை ஜெயிக்க விடக்கூடாது! – ஆத்திரப்படும் ஜனனி, எதிர்நீச்சல் தொடரும் களம்!

ஜனனிக்கும் குணசேகரனுக்கும் இடையேயான மோதல் இன்னும் கடுமையாகப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மீனாட்சி அம்மன் என்ன தீர்ப்பு கூறுவார்?

Dec 28, 2025 - 11:25
0 3
குணசேகரனை ஜெயிக்க விடக்கூடாது! – ஆத்திரப்படும் ஜனனி, எதிர்நீச்சல் தொடரும் களம்!

தொடர் நாடகம் எதிர்நீச்சல் இன்றைய எபிசோடில் மிகவும் பதற்றமான திருப்பத்தை எட்டியுள்ளது. ஜனனி தனது புதிய கடையைத் திறக்க வேண்டிய இடம், குணசேகரன் வீட்டு மருமகள் என்று அறிந்திருந்த நிலத்தின் உரிமையாளர், திடீரென மனம் மாற்றி, "இந்த இடத்தில் யாரோ வந்து செல்கிறார்கள். அதனால் நான் உங்களுக்கு நிலத்தை வாடகைக்கு கொடுக்க முடியாது" என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

இதைக் கேட்ட ஜனனி, தனது உரிமையை வலியுறுத்தி, “நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுத்தான் இந்த நிலத்தை வாடகைக்கு கொடுத்தீர்கள். இப்போது மறுத்தால், உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்” என கோபத்துடன் எச்சரிக்கிறார். இதற்கு நிலத்தின் உரிமையாளர், “போலீஸில் புகார் கொடுமா! தாராளமாகக் கொடு! நான் நிலத்தை வாடகைக்கு கொடுத்தேன் தான். ஆனால், அந்த நிலத்தில் முறைகேடான தொழில் நடக்கும் என்றால், என்னை யாரும் செய்ய முடியாது” என்று பதிலடி கொடுக்கிறார்.

இந்த நிலையில், ஜனனியின் தோழி சக்தி, “சார், உங்க வீட்டுப் பெண்களாக இருந்தா இப்படித்தான் அவங்ககிட்ட பேசுவீங்களா?” என்று கேள்வி எழுப்ப, அதற்கு நிலத்தின் உரிமையாளர், “எங்க வீட்டுப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து இப்படி நடந்துக்க மாட்டாங்க. அப்படியே நடந்துக்கிட்டா, கால் உடைச்சிடுவோம்!” என்று கூறி மிரட்டுகிறார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு ஜனனி கோபத்தில் தத்தளிக்கிறார். “யார் தடுத்தாலும், என்ன நடந்தாலும், இன்று இந்த இடத்தில் திறப்பு விழா நடத்துவேன். இதை யாராலும் தடுக்க முடியாது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்க!” என்று உறுதியாக அறிவித்து, வெளியேறுகிறார். இந்த காட்சியை தூரத்திலிருந்து குணசேகரன் ஏற்பாடு செய்த ரவுடி உற்று நோக்குகிறான்.

வீடு திரும்பிய ஜனனி, உடனடியாக “இன்று கடையைத் திறந்தே ஆக வேண்டும்” என்று உறுதியாகச் சொல்கிறார். ஆனால், விசாலாட்சி, “ஜனனி, கொஞ்சம் பொறுமையா இரு. என் மனசுக்கு எதுவும் சரியாக படவில்லை” என்று கவலை தெரிவிக்கிறார். அதற்கு ஜனனி, “வெளியில் இருந்து நமக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கும் குணசேகரனுக்கு இன்று சரியான பாடம் கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும்!” என்று உறுதியாக நிற்கிறார்.

அப்போது, விசாலாட்சி, “தயவு செய்து என்னைக் கேள். மீனாட்சி அம்மனிடம் சீட்டுப் போட்டுக் கேட்போம். அம்மன் உத்தரவு கொடுத்தால் இன்றே கடையை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லி, இருவரும் அம்மனிடம் சீட்டு எழுதி விடுகின்றனர். இந்த நிகழ்வு முழுவதையும் வெளியில் மறைந்திருந்து கவனித்த அறிவுக்கரசி, உடனே குணசேகரனுக்கு தகவல் அனுப்பி, சந்தோஷப்படுகிறார்.

இந்த நிலையில், ஜனனிக்கும் குணசேகரனுக்கும் இடையேயான மோதல் இன்னும் கடுமையாகப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மீனாட்சி அம்மன் என்ன தீர்ப்பு கூறுவார்? ஜனனி தன் கடையை இன்று திறக்க முடியுமா? குணசேகரன் அடுத்து என்ன சூழ்ச்சி செய்வார்? – இவை அனைத்தும் ரசிகர்களை அடுத்த எபிசோடுக்காக ஆவலுடன் காத்திருக்க வைக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User