தரதரவென தரையில் இழுத்து செல்லப்பட்ட நடிகை நீது சந்திரா

2 years ago 319

நடிகை நீது சந்திரா

‘யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நீதுசந்திரா அதன் பின்னர் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ ’ஆதிபகவன்’ வைகை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.  மேலும் இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தமிழில் ஒரு படத்தில் நீத்து சந்திரா நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவரை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை நீதுசந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


நடிகை நீது சந்திராவை தரதரவென இழுத்து செல்லும் காட்சி எந்த படத்திற்காக படமாக்கப்பட்டது என்பதை நீத்து சந்திரா குறிப்பிடவில்லை என்றாலும் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒன் டு ஒன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தான் இது என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தை திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார்.