சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்த சத்யராஜ்

4 years ago 145

நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ், சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது