எனிமி படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட விஷால்

3 years ago 235

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். 

cஇந்நிலையில், எனிமி படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்த செல்பி புகைப்படத்தை, நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.