உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ரேணிகுண்டா பட நடிகை சனுஷா

3 years ago 460

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான காசி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் சனுஷா. அதன் பின்னர் பீமா படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் விமலுக்கு ஜோடியாக எத்தன் என்ற படத்தில் நடித்தார்.


தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. மேலும் உடல் எடை கூடி குண்டாகி இருந்தார். 

இந்த நிலையில் தற்போது இவர் மலையாள பத்திரிகை ஒன்றில் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.