"அழகோ அழகு" அழகு தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா.!

4 years ago 396

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இவர் அண்ணாத்த, நெற்றிக்கண்,காத்து வாக்குல ரெண்டு காதல் , மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.

படங்களில் மட்டுமின்றி ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வரும் நயன்தாரா தற்போது ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.


அதிலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பட்டு புடவையில் மங்களகரமான தோற்றத்தில் உள்ள ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகில் உள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.